அமெரிக்க, சீன நல்லுறவின் அவசியம் பற்றி பிரதமர் உரை

அமெரிக்க, சீன நல்லுறவின் அவசியம் பற்றி பிரதமர் உரை

1 mins read
05068531-8d71-45a9-af57-6b8bfd00aafa
பிரதமர் லீ சியன் லூங் PHOTO: ST FILE -

பிரதமர் லீ சியன் லூங் வரும் வெள்ளிக்கிழமை வருடாந்திர ஆசிய தற்காப்பு கருத்தரங்கில் முக்கிய உரையாற்றுகிறார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையில் நிலையான, ஆக்ககரமான உறவு நிலவ வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி திரு லீயின் உரை ஒருமித்த கவனம் செலுத்தும்.

இந்த இரு வல்லரசுகளுக்கும் இடையில் பதற்றம் கூடிவரும் நிலையில், உலக ஒழுங்கைக் கட் டிக்காப்பதில் சிங்கப்பூரும் இதர சிறிய நாடுகளும் ஆற்றக்கூடிய பங்கு பற்றி திரு லீ விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அக்கருத்தரங்கின் ஏற்பாட்டாளர் கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையில் வா‌ஷிங்டனில் இம்மாதத் தொடக்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை முறிந்துபோனது.

ஒன்று மற்றொன்றின் பொருட் களுக்குப் போட்டிப்போட்டுக் கொண்டு தீர்வை விதிக்கின்றன.

சீனாவின் மிகப்பெரிய ஹுவாவெய் நிறுவனத்தை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துவிட்டது. இதனால் சீனா வின் அந்தப் பிரம்மாண்டமான நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தக ரீதியில் தொடர்புகொள்ள முடியாமல் முடங்கி இருக்கிறது.

தற்காப்பு அமைச்சர்கள், ராணுவத்துறை தலைவர்கள், உயர்நிலை தற்காப்பு அதிகாரிகள் ஆகியோரிடையே திரு லீ ஷங்ரிலா விரிவுரை ஆற்றுவார்.

ஷங்ரிலா ஹோட்டலில் வெள்ளி முதல் மூன்று நாட்கள் நடக்கும் இக்கலந்துரையாடலில் 2011க்குப் பிறகு முதல் தடவையாக சீன தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங் கலந்துகொள்வார்.