தொண்டூழியர்களை நிர்வகிக்க சிறந்த ஏற்பாடு இருந்தால் சமூக சேவையில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
தொண்டூழிய அமைப்புகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நிர்வாகி ஒருவரைப் பெற்றிருந்தால் அவை தங்களுடைய தொண்டூழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து அவர்களை நெடுநாட்களுக்குத் தங்களிடமே தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்பது அந்த ஆய்வு மூலம் கண்டறியப்பட்டு உள்ள நிலவரமாகும்.
தேசிய சமூக சேவை மன்றம் 10 அமைப்புகளை உள்ள டக்கி இரண்டாண்டு காலம் நடத்திய அந்த ஆய்வு, தொண் டூழிய உணர்வுடன் கூடிய நிர்வாகி ஒருவரை நிறுவனங்கள் நியமிக்கும் பட்சத்தில் அந்த நிறுவனங்களின் வழக்கமான தொண்டூழியர்களின் எண்ணிக்கை மொத்தத் தில் 27,000 பேரிலிருந்து 41,000 பேராக அதிகரித்தது என்று கூறியது. தொண்டூழிய கால அளவும் 189,000 மணிநேரம் முதல் 422,000 மணிநேரமாக அதிகரித்ததாக நேற்று நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

