'அறுதிப் பெரும்பான்மையுடன் வலுவான ஆளும் கட்சி சிங்கப்பூருக்குத் தேவை'

'அறுதிப் பெரும்பான்மையுடன் வலுவான ஆளும் கட்சி சிங்கப்பூருக்குத் தேவை'

1 mins read

சிங்கப்பூர் அறுதிப் பொரும்பான்மையுடன் கூடிய ஆளும் கட்சியைப் பெற்றிருக்கவேண்டும் என்று ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் கூறியுள்ளார்.

திரு கோ, தன் சுயசரிதையை எழுதி இருக்கிறார். "அரிய சாதனை: கோ சோக் டோங்கின் கதை" என்ற அந்தச் சுயசரிதையின் சீன மொழிப் பதிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. அதற்கு முன் சாவ் பாவ் சீன நாளிதழுக்குத் திரு கோ பேட்டி அளித்தார்.

இன்னும் 20 ஆண்டு காலத்தில் நாடாளுமன்றத்தில் 75% முதல் 80% வரை உறுப்பினர்களுடன், தெள்ளத்தெளி வான அறுதிப் பெரும்பான்மையுடன் வலுவான ஆளும் கட்சி இருக்க வேண்டும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

அரசாங்கத்திற்குச் சவாலாக விளங்கக்கூடிய அறிவார்ந்த, ஆக்ககரமான, விவாதிப்பு திறன்மிக்க எதிர்த்தரப்பு இருக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ள திரு கோ, இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நாடாளுமன்றத்தில் உண்மையான விவாதிப்பு இடம்பெற வழிபிறக்கும் என்றார்.