சட்டவிரோத வேலை இடைத்தரகர்கள் அதிகரித்திருப்பதாகக் கவலை

சட்டவிரோத வேலை இடைத்தரகர்கள் அதிகரித்திருப்பதாகக் கவலை

1 mins read

சிங்கப்பூரில் சட்டவிரோத வேலை இடைத்தரகர்கள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது என்றும் இது கவலை அளிப்பதாக உள்ளது என்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும் அமைப்பான டிடபிள்யூசி2 (TWC2) என்ற அமைப்பு தெரிவிக்கிறது.

இங்கு ஒவ்வோர் ஆண்டும் அத்தகைய உரிமம் பெறாத இடைத்தரகர்களுக்கு $232 மில்லியன் கிடைக்கும் வாய்ப்பும் இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டு இருக்கிறது.

முன்பைவிட அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் சட்டவிரோத முகவர்கள் பக்கம் திரும்புவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

வெளிநாட்டினர் சிங்கப்பூரில் சட்டவிரோத இடைத் தரகர்கள் மூலம் அப்போதைக்கு அப்போது வேலையில் சேர்ந்து சம்பாதித்தாலும் கடைசியில் ஒரு காசு கூட அவர்களுக்கு மிஞ்சுவதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, இந்த நிலவரம் பற்றி கருத்துரைத்த மனிதவள அமைச்சின் பேச்சாளர், 2016க்கும் 2018க்கும் இடையில் உரிமம் பெறாத வேலை நியமன முகவராகச் செயல்பட்டதற்காக சுமார் 350 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.