சுடச் சுடச் செய்திகள்

முதன்மை வர்த்தக நிலச் சொத்து இடம் சிங்கப்பூர்

ஆசியாவின் தலைசிறந்த வர்த் தக நிலச்சொத்து இடமாக சிங் கப்பூர் தரப்படுத்தப்பட்டுள்ளது. 

தொழில்நுட்பம், ஊடகம்,  தொலைத்தொடர்பு ஆகிய நிறு வனங்களுக்கான கவர்ச்சிகர மான துணைச் சந்தைகளை சிங் கப்பூர் கொண்டிருப்பதாக ஆய்வு அறிக்கை  தெரிவிக்கிறது. 

‘கோலியர்ஸ் இண்டர்நேஷ னல்’ என்ற சொத்துச் சேவை நிறுவனம் அந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. 

தொலைத்தொடர்பு நிறுவனங் களையும் நீக்குப்போக்கான வேலையிட பயனீட்டாளர்களை யும் பொறுத்தவரையில் ஆசிய வட்டாரத்திலேயே ஷெண்டன் வே/ தஞ்சோங் பகார் பகுதி தான் மிகவும் பிரபலமான வட்டார மாக இருக்கிறது. 

அந்தப் பகுதியின் அருமை யான இணைப்பு, தொடர்பு வசதி களே இதற்கான காரணம் என்று ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. 

சிட்டி ஹால் மற்றும் ராஃ பிள்ஸ் பிளேஸ்/நியூ டௌன் டவுன் பகுதியும் ஏராளமான தரமான அலுவலக இடங்களுடன் நல்ல ஓர் இடமாகத் திகழ்கிறது என்றும் ஆய்வு சுட்டிக்காட்டி இருக்கிறது. 

தொழில்நுட்பக் குழுமங்கள், அலுவலக இடங்கள், பலவற்றை யும் எளிதாக தொடர்புகொள்ளக் கூடிய, எட்டக்கூடிய அளவுக்கு இணைப்பு வசதிகள், வாடகைக் கட்டணம் ஆகிய நான்கு அம்சங் களின் அடிப்படையில் அந்த ஆய்வு சிங்கப்பூரின் இந்தப் பகுதிகளை அடையாளம் கண்டு இருக்கிறது. 

அலுவலக இடங்களுக்கு தேவையை உருவாக்கும் முக்கிய சக்தியாக தொலைத்தொடர்பு நிறுவனங்களே உள்ளன என்று கோலியர்ஸ் நிறுவனத்தின் ஆசி யப் பகுதிக்கான ஆய்வுத் துறை நிர்வாக இயக்குநர் ஆண்ட்ரு ஹாஸ்கின்ஸ் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon