தாய்மொழிக் கல்வி முனைப்புகளை முடுக்கும் கல்வியமைச்சு

தாய்மொழிக் கல்வி முனைப்புகளை முடுக்கும் கல்வியமைச்சு

1 mins read
48e2d46f-7aca-4e3f-94f9-0e9872f4dfb5
-

மாணவர்களின் பன்மொழித்திறனை ஊக்குவிக்கும் முனைப்புகளைக் கல்வியமைச்சு விரிவுபடுத்தவுள்ளது. தமிழ், மலாய், சீன இலக்கியங்களைப் பற்றிய பயணங்கள், முகாம்கள் உள்ளிட்ட புத்தாக்க முறைகளின் மூலம் கற்பதற்கான வாய்ப்புகள் உள்ளடங்கிய ஈராண்டு திட்டம், அடுத்த ஆண்டு முதல் பதினைந்து உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும். அத்துடன், 1990ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கிய மொழி விருப்பப்பாடத் திட்டம் (Language Elective Programme) தேசியப் பல்கலைக்கழகம், ராஃபிள்ஸ் கல்வி நிலையம், ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக்கல்லூரி ஆகியவை அடுத்தாண்டு முதல் சேரும். இதில் தமிழுக்கான விருப்பப்பாடத் திட்டத்தில் காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளி, ரிவர்சைட் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஈசூன் டவுன் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சேர்ந்துகொள்ள முடியும். இந்தத் திட்டங்களைச் செவ்வாய்க்கிழமை (28 மே) அறிவித்த கல்வியமைச்சர் ஓங் யீ காங், "மொழிக் கற்றல், குறிப்பாகத் தாய்மொழிக்கற்றலுக்குப் புத்துயிரூட்டுவதற்கு இதுவே சரியான நேரமாக உள்ளது. காலத்திற்கு ஏற்ற முனைப்பாக இது அமையும்," என்று கூறினார்.