தொழில்நுட்ப உதவியுடன் பக்கவாத நோயாளிகளுக்கு மறுவாழ்வுப் பயிற்சி

தொழில்நுட்ப உதவியுடன் பக்கவாத நோயாளிகளுக்கு மறுவாழ்வுப் பயிற்சி

1 mins read
39345a9c-6251-4cfa-ac4c-eb567edbc111
ஜூரோங் பாயின்ட் ஷாப்பிங் சென்டரில் அமைந்துள்ள பக்கவாத நோய் மறுவாழ்வு நிலையத்தில் பக்கவாதப் பாதிப்பிலிருந்து மீண்டவருக்கு தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பக்கவாத நோயாளிகளுக்கு மறுவாழ்வுப் பயிற்சி எளிதாகக் கிடைக்க வகை செய்கிறது ஜூரோங் பாயின்ட் கடைத்தொகுதி யில் திறக்கப்பட்டுள்ள புதிய வாதநோய் நலவாழ்வு மையம்.

சிங்கப்பூரில் செயல்படும் இரண்டாவது இத்தகைய நிலையம் இது. லெங்கொக் பாருவில் உள்ள எனேபலிங் வில்லேஜ் என்ற முதல் பக்கவாத நோய் மறுவாழ்வு நிலையத்தைவிட இது இரு மடங்கு பெரியது.

பக்கவாத நோயிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கும் அவர் களைப் பராமரிப்பவர்களுக்கும் ஆதரவளிக்கும் தொண்டூழிய முயற்சியான பக்கவாதநோய் ஆதரவு நிலையத்தால் (ஸ்ட்ரோக் சப்போர்ட்ஸ் ஸ்டேஷன்) செயல் படுத்தப்படும் இந்தப் புதிய நிலையம், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மறுவாழ்வுப் பயிற்சியளிக்கும் இரு திட்டங்களைச் செயல்படுத்து கிறது.

ஜூலை மாதம் முதல் நடமாடச் சிரமப்படும் பக்கவாத நோயாளிகள் ரோபோடிக் உடைகளை அணிந்து எடை தூக்குவது, நடப்பது, உடலை சமநிலையில் வைத்திருப் பது போன்ற பயிற்சிகளைச் செய்வார்கள்.

அலெக்சாண்டிரா மருத்துவ மனையின் தொழில்நுட்பம் மூலம் நடமாட்டத்தை மேம்படுத்தும் திட்டத்தின் உதவியுடன் இது செயல்படுத்தப்படும்.

தானியக்க முறையில் செயல் படும் கைகளுக்குப் பயிற்சியளிக் கும் தொழில்நுட்பத்தை உருவாக்க சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தின் சிஸ்டம் சயன்ஸ் இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து பக்கவாத நோய் ஆதரவு நிலையம் செயல்படுகிறது.