பாதுகாப்பான மின்னிலக்க சேவைக்கு உதவும் திட்டம்

பாதுகாப்பான மின்னிலக்க சேவைக்கு உதவும் திட்டம்

1 mins read

மருத்துவமனை வருகையைப் பதிவு செய்ய அல்லது பொருட் காட்சியில் பொருட்களை வாங்க சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் விரைவில் தங்களது சிங்பாஸ் தொலைபேசி செயலியைப் பயன்படுத்தலாம். அதன்மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து சேவைகளைப் பெறலாம்.

அரசாங்கம் உருவாக்கியுள்ள எஸ்ஜி-வெரிஃபை எனும் புதிய கருவி வர்த்தகங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும் அரசாங்கம் சரிபார்த்த தரவுகளையும் பெற உதவும். டிசம்பர் மாதத்தில் செயல்படத் தொடங்கும் எஸ்ஜி-வெரிஃபை, சிங்கப்பூரின் தேசிய மின்னிலக்க அடையாள முறையின் அடுத்த கட்டமாகும்.

இது ஒற்றை மின்னிலக்க அடையாளத்தைக் கொண்டது. அரசாங்கம், தனியார் சேவை களைப் பெற குடியிருப்பாளர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.

அரசாங்க தொழில்நுட்ப முகவை (GovTech) எஸ்ஜி-வெரிஃபை குறித்த அறிவிப்பை தனது மின்னிலக்க அரசாங்க சேவைகளில் நேற்று வெளியிட்டது.

வர்த்தகங்கள் QR குறியீடு மூலம் பாதுகாப்பான அடையாள சரிபார்த்தலை மேற்கொள்ளவும் தரவுகளைப் பரிமாறவும் உதவும் எஸ்ஜி-வெரிஃபை இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அறிமுகமாகும் என அது தெரிவித்தது.