காலத்துக்கேற்ப மின்னிலக்க  உருமாற்றம் பெறும் ஊடகத்துறை

உற்பத்தித் துறையிலிருந்து நிதித் துறை சேவைகள் வரை மின்னி லக்கத் தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் அரசாங்கமும் மக்களைச் சென்ற டையும் புதிய வழிகளை அடை யாளம் காணமுடியும் மின்னிலக்கத் தளங்களில் மாற்றங்களைச் செய்து வருகிறது என்று தொடர்பு தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் போன்ற ஊடக நிறு வனங்களும் வாசகர்கள், பங்கு தாரர்களின் தேவைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள தீவிர மான முயற்சிகளை மேற்கொண்டு வருவது, மாறிவரும் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தக்க சமயத்தில் செய்யப்படுபவை என்றார் அமைச்சர்.

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு நேற்று வருகை யளித்த அமைச்சர், நிறுவனத்தின் பல்வேறு மின்னிலக்கத் திறன் களையும் பார்வையிட்டார். 

குறிப்பாக, எந்தெந்த செய்தி களை வாசகர்கள் விரும்பிப் படிக் கிறார்கள், பிரபலமான செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள செய்தியறைகள் எப்படித் தரவுகளைப் பயன்படுத்து கின்றன என்பதைத் தெரிந்து கொண்டார்.

மேலும், மெய்நிகர், மிகைநிகர் தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தி எவ்வாறு செய்திகள் படைக்கப்படுகின்றன என்பதையும் நேரில் கண்டு அறிந்தார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அரங்கத் தின் வசதிகளையும் பார்வையிட்ட அமைச்சரிடம் அவ்வரங்கில் நேர் காணலும் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, பத்திரிகை ஆசிரிய ராக இருந்தால் எந்த செய்திகளை அவர் தலைப்புச் செய்திகளாகப் போடுவார் என்று கேட்டபோது, அமெரிக்கா-சீனா வர்த்தக போர், இருநூறு ஆண்டு நிறைவு காட்சி,  எஃப் என் பிரபலம் நிக்கி லாவ்டா மரணம் ஆகியவற்றை முக்கிய செய்திகளாக தான் தேர்ந்தெடுப் பேன் என்று கூறினார். அதற்கான காரணங்களையும் அவர் விளக்கினார்.

கடந்த 1997ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, தாம் அரசியலுக்கு வந்த காலத்தி லிருந்து ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டுவந்துள் ளதாக அமைச்சர் திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.

வெவ்வேறு மின்னிலக்க வளங்கள் மூலமாக விரல்நுனியில் தகவல்கள் கிடைப்பது ஒரு வரம். ஒருவரின் சிந்தனைக்கும் வெவ் வேறு விஷயங்களுக்கான அணுகு முறைகளுக்கும் தேவையான வளங்களைப் பெற இது உதவு கிறது என்று அவர் கூறினார்.

அதேநேரத்தில், இத்தகைய தகவல் வளம் பல வழிகளில் கிடைக்கும்போது, அதிலிருந்து எது உண்மையானது,  எது போலி யானது என்பதை அவரவர் தேர்வுசெய்வ வேண்டியும் உள்ளது என்பதை அமைச்சர் ஈஸ்வரன் சுட்டினார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon