சுடச் சுடச் செய்திகள்

ஹெங்: உலகப் பொருளியல் விளைவுகளை எதிர்கொள்ள ஆயத்தம்

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் ஏற்படும் பாதக விளைவுகளைச் சந்திக்க சிங்கப்பூர் தயாராக உள்ளது.  ஆனால், இரு நாட்டு பொருளியல் உடன்பாடுகள் தோல்வியடைந்தால், பொருளியல் மாற்றத்துக்கு சிங்கப்பூர் தயாராக இருக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.

உலகின் இரு பெரும் பொருளி யல் நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த் தகப் பூசல் அதிகரித்து வருவதால் ஏற்படும் பாதிப்புகளை சிங்கப்பூர் பொருளியல் உணரத் தொடங்கி யுள்ள வேளையில் திரு ஹெங்கின் இக்கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

சென்ஷென் நகரில் செய்தி யாளர்களிடம் பேசிய திரு ஹெங், அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் விரைவில் தீர்வு ஏற்படக்கூடிய ஒரு விவகாரம் அல்ல என்றார். இதனால் உலகப் பொருளியலுடன் சிங்கப்பூர் பொருளியலும் பாதிப்படையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்றார் அவர்.

சிங்கப்பூரின் முதல் மூன்று மாத கால பொருளியல் வளர்ச்சி கணிக்கப்பட்டதைவிட மெதுவாக இருந்ததுடன், கடந்த பத்தாண்டு களில் ஒரு காலாண்டின் ஆக மெதுவான வளர்ச்சியாகவும் இருந்தது.

வர்த்தக தொழில் அமைச்சு இவ்வாண்டு முழுமைக்குமான பொருளியல் வளர்ச்சியை கீழ் நோக்கி திருத்தி அமைத்துள்ளது. முன்பு 1.5% முதல் 3.5% ஆக இருந்தது. தற்போது 1.5% முதல் 2.5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் சிங்கப்பூர் இந்த வர்த்தகப் புயலை தாக்குப்பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித் தார் நிதி அமைச்சருமான திரு ஹெங். சீன நகரங்களின் வருகையை முடித்துக்கொண்டு அவர் நேற்று தனது எட்டுநாள் பயணத்தின் இறுதி இடமாக ஹாங்காங் சென்று சேர்ந்தார். 

சிங்கப்பூரின் பொருளியலை இன்னும் வேகமாக உருமாற்ற வேண்டும். வர்த்தகப் போருக்கு அப்பால், தொழில்நுட்ப ரீதியிலும் நாம் பல மாற்றங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். பொருளியல் உருமாற்றம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், நமது ஊழியர்கள் பின்தங்கி விடக்கூடாது என்பதிலும் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon