தந்தையைத் தாக்கியவருக்கு சீர்திருத்தப் பயிற்சி

தந்தையைத் தாக்கியவருக்கு சீர்திருத்தப் பயிற்சி

1 mins read
Google News Preferred Icon

கடந்த 2016ஆம் ஆண்டில் $2,000 கொடுக்க மறுத்ததற்காக தந்தையைக் கத்தியால் தாக்கிய பதின்மவயது மாணவருக்கு குறைந்தது ஆறு மாத கால சீர்திருத்தப் பயிற்சி நேற்று விதிக்கப்பட்டுள்ளது.

19 வயது டிலன் லோய் ஸ`ங் ஹுவான் சீர்திருத்தப் பயிற்சி நிலையத்தில், ஆலோசனை, அணிவகுப்புப் பயிற்சி உட்பட கடுமையான பயிற்சியில் ஈடுபடுவார்.

திரு லோய் சியாங் சியானுக்கு காயம் ஏற்படுத்திய குற்றத்தை பிப்ரவரி மாதம் டிலன் ஒப்புக்கொண்டார்.

டிலன் கடுமையான குற்றத் தைச் செய்துள்ளார். அவர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருந் தால் அவருக்கும் சிறையும் பிரம்படியும் விதிக்கப்பட்டிருக்க லாம் என்று மாவட்ட நீதிபதி மே மெசனஸ் தீர்ப்பின்போது கூறினார்.

மூன்றாண்டுகள் ஆன நிலை யிலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலைமை இன்னும் மேம்படவில்லை என்ற அவர், இதனோடு இதற்கு முடிவு ஏற் படும் எனத் தாம் நம்புவதாகச் சொன்னார்.