15 உயர்நிலைப் பள்ளிகளில் மொழி விருப்பப்பாடத்திட்டம்

15 உயர்நிலைப் பள்ளிகளில் மொழி விருப்பப்பாடத்திட்டம்

3 mins read
bd9c4b9c-45d2-4b9f-a327-d61c2bd00921
நேற்று நடைபெற்ற கல்வி அமைச்சின் ஆசிரியர்கள் மாநாடு மற்றும் 'எக்ஸெல்' விழாவில் மாணவர்கள் உருவாக்கிய ஒற்றுமை விளையாட்டில் பங்கேற்றனர் (இடமிருந்து) கல்விக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டெனிஸ் புவா, கல்வி அமைச்சர் ஓங் யி காங். இடமிருந்து 3வது நிற்பவர் கல்வி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பன்மொழித்துவத்தை ஊக்கப்படுத்தும் கல்வி அமைச்சு மேற் கொண்ட தொடர் முயற்சியின் பலனாக, இன்னும் அதிகமான மாண வர்கள் விரைவில் தாய்மொழிகளில் உள்ள தங்கள் ஆர்வத்தை மேலும் விரிவுபடுத்திக்கொள்வார்கள்.

இதன்படி, சீன, மலாய் அல்லது தமிழ் இலக்கியத்தை மாணவர்கள் பயிலும் ஈராண்டுத் திட்டம் அடுத்த ஆண்டிலிருந்து 15 உயர்நிலைப் பள்ளிகளுக்கு நீட்டிக்கப் படுகிறது. இதில் இலக்கியம் பயி லும் மாணவர்களுக்கு கல்விப் பயணங்கள், மொழி முகாம்கள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய் யப்படும்.

மொழி விருப்பப்பாடத் திட்டம் 1990ஆம் ஆண்டிலிருந்து சில தொடக்கக் கல்லூரிகளில் இடம் பெற்றுவருகிறது.

அது இப்போது தேசிய தொடக்கக் கல்லூரி, ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி, ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளில் அடுத்த ஆண்டில் இருந்து கற்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கல்வி அமைச்சின் ஆசிரியர் கள் மாநாட்டில் நேற்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரை யாற்றிய கல்வி அமைச்சர் ஓங் யி காங், "மொழிக் கற்றலில், குறிப் பாக நமது தாய்மொழிக் கற்றலுக் குப் புத்துயிரூட்டுவதற்கு இது தக்க தருணம். இது காலத்துக்கு ஏற்ற முயற்சியாகும்," என்றார்.

சிங்கப்பூரின் இருமொழிக் கல்விக் கொள்கையின் மதிப்பு பற் றியும் அது ஏன் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் பேசிய அமைச்சர், பன்மொழிக் கற்றலுக்கு சில ஐரோப்பிய நாடுகளும் சில ஆசிய நாடுகளும் கொடுத்து வரும் முக்கியத்துவத்தை உதார ணமாகச் சுட்டினார்.

"மொழிகளைக் கற்றுக்கொள்வதால் நாம் மேலும் முன்னேற்றம் அடையலாம் என்று உறுதியாகக் கூறும் வரலாற்றுச் சந்திப்பில் நாம் இருக்கிறோம்," என்று திரு ஓங், சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் சுமார் 1,700 ஆசிரியர்கள் முன்னி லையில் எடுத்துரைத்தார்.

"முதலில் நமது வட்டாரம் செழிப்படைகிறது. தென்கிழக்கா சியா, இந்தியா, சீனா ஆகிய அனைத்தும் வளர்ச்சியடைகின்

றன.

"சிங்கப்பூரின் பலகலாசாரத் தன்மை இந்தச் சூழ்நிலையில் நமக்குச் சிறப்பான பொருளியல் சாதகத்தை அளிக்கிறது. இதை பெற்றோரும் மாணவர்களும் அறிவர்," என்றார் அவர்.

வீட்டில் தாய்மொழியில் பேசும் குடும்பங்களின் விகிதம் குறைந் துள்ளது. அதே வேளையில் இரு மொழிகள் பேசும் குடும்பங்களின் விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் 80 விழுக்காட்டிலிருந்து 90 விழுக் காட்டுக்கு உயர்ந்துள்ளது என்ப தையும் அமைச்சர் சுட்டிக் காட்டி னார்.

அடுத்த ஆண்டு மொழி விருப் பப்பாடத் திட்டம் வழங்கப்படும் 15 உயர்நிலைப் பள்ளிகளில் மூன்றில் தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டம் இடம்பெறும். காமன்வெல்த், ரிவர் சைட், ஈசூன் டவுன் ஆகியவையே அந்த மூன்று உயர்நிலைப் பள்ளிகள்.

உயர்நிலை இரண்டின் ஆண்டிறுதித் தேர்வில் தமிழில் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மொழி விருப்பப்பாடத் திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம்.

இத்திட்டத்தில் உள்ள எல்லா 'ஓ' நிலை மாணவர்களும் தங்கள் தாய்மொழியில் இலக்கியம் பயில்வார்கள். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் உள்ள மாணவர்கள் பள்ளி சார்ந்த பாடத்தைப் பயில் வார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக 'ஓ' நிலையில் உயர் தாய்மொழியை எடுத்துப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதைச் சுட்டிய அமைச்சர், அவர்கள் சீனா, தைவான், மலே சியா, இந்தியாவில் தமிழ்நாடு போன்ற நாடுகளின் மாணவர் களைபோல சிறந்தவர்களாக விளங்கக்கூடிய திறன் பெற்ற வர்களுக்கு, கல்வி அமைச்சு அதிக ஆதரவளித்து உதவும் என்றார்.

2019-05-29 06:00:00 +0800