குரங்கம்மை தொற்றியவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 22 பேர் வீடு திரும்பினர்

குரங்கம்மை தொற்றியவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 22 பேர் வீடு திரும்பினர்

1 mins read
e82d68c7-c6a2-4616-9bbd-9ee6f125968b
-

குரங்கம்மை தொற்றிய நைஜீரிய சுற்றுப்பயணியுடன் தொடர்பிலிருந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட 22 பேருக்கும் கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குரங்கம்மை கிருமி வளர்வதற்குத் தேவைப்படும் காலக்கட்டமான 21 நாட்கள் முடிந்துவிட்டதாகச் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை (மே 28) தெரிவித்தது. சம்பந்தப்பட்ட 38 வயது நைஜீரிய ஆடவர், மே மாதம் 8ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்தபோது அவருக்குக் குரங்கம்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் குணமாகியுள்ளதாகவும் மற்றவர்களுக்கு இந்நோயைப் பரப்பமாட்டார் என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. அந்த நைஜீரியர், தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்திலிருந்து மே மாதம் 24 ஆம் தேதி வீடு திரும்பினார். அவருடன் தொடர்பிலிருந்த மேலும் எட்டு பேர் கண்காணிக்கப்பட்டனர். அவர்களிடத்திலும் குரங்கம்மைக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.