2017ஆம் ஆண்டைக் காட்டிலும் சென்ற ஆண்டு அதிகமான ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வேலைச் சந்தை தொடர்ந்து ஆரோக்கியமாக இருந்ததாக மனிதவள அமைச்சு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த சம்பளங்கள் கடந்தாண்டில் 4.2 விழுக்காடு உயர்ந்தன. இதற்கு முந்தைய ஆண்டில் அந்த விகிதம் 3.2 விழுக்காடு உயர்ந்ததாக அமைச்சு தனது வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டது. நிதித்துறை, காப்புறுதி, நிபுணத்துவ சேவை ஆகிய துறைகள், கடந்தாண்டில் ஆக அதிகம் வளர்ச்சி கண்டுள்ளன. உற்பத்தி, உணவு மற்றும் பானச் சேவைகள், சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் குறிப்பிட்டத்தக்க மாற்றம் ஏற்படவில்லை. சம்பளங்களை ஒட்டுமொத்தமாகக் குறைத்த நிறுவனங்களின் விழுக்காடு 2017ஆம் ஆண்டின் 12 விழுக்காட்டிலிருந்து கடந்தாண்டு 9 விழுக்காடாகக் குறைந்தது.
அதிக ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு
1 mins read
-

