பிள்ளைகள் வாழ்வதற்குகந்த உலகின் தலைசிறந்த நாடாக சிங்கப்பூர் இருப்பதாக 'சேவ் த சில்ட்ரன்' (Save the Children) என்ற சிறார் நல அமைப்பின் வருடாந்திர அறிக்கை குறிப்பிடுகிறது. இன்று வெளியீடு காணும் உலகளாவிய பிள்ளைப்பருவ அறிக்கை, எட்டு மேற்கத்திய நாடுகளையும் தென்கொரியாவையும்விட உயர்வான நிலையை சிங்கப்பூர் அடைந்திருப்பதாகக் காட்டுகிறது. பிள்ளைகளுக்குச் சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, ஊட்டச்சத்து, பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதன் தொடர்பில் 176 நாடுகள் அந்த அறிக்கையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. பிள்ளைப்பருவக் குறியீட்டில் சிங்கப்பூர் ஆயிரத்தில் 989 புள்ளிகளைப் பெற்று முதல் நிலையை அடைந்திருப்பதாக அறிக்கை விவரித்தது. கடந்தாண்டு சிங்கப்பூரும் சிலோவெனியாவும் இணையாக முதல் இடத்தை வகித்தன. 2017ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் உயிருடன் பிறக்கும் ஒவ்வோர் 1,000 குழந்தைகளில் உயிரிழக்கும் குழந்தைகளின் விகிதம் 2.8 விழுக்காடாக இருந்ததாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 19 வயதுக்குக் குறைவான ஒவ்வொரு 100,000 பேரின் இறப்பு விகிதம் 0.1 விழுக்காடு.
அறிக்கை: பிள்ளைகள் வாழ்வதற்குகந்த சிறந்த இடம் சிங்கப்பூர்
1 mins read
-

