எம்ஆர்டி ரயில் தடங்கள் அருகே தீ மூட்டியவருக்கு 13 வாரம் சிறை

எம்ஆர்டி ரயில் தடங்கள் அருகே தீ மூட்டியவருக்கு 13 வாரம் சிறை

1 mins read

அங் மோ கியோவில் அமைந்துள்ள எம்ஆர்டி ரயில் தடங்கள் அருகில் நெருப்பு மூட்டிய 49 வயது லிம் டெக் சாய்க்கு நேற்று 13 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதியன்று அதிகாலை 2.20 மணியளவில் அவென்யூ 8ல் உள்ள புளோக் 510 அருகே மூன்று தீமூட்டிகளை வைத்துக்கொண்டு நடந்து சென்ற லிம், பின்னர் ஒவ்வொன்றையும் பற்ற வைத்து அவற்றைப் புல்வெளியில் தூக்கி எறிந்தார். சிறு சிறு புல்வெளிப் பகுதிகள் எரிவதைப் பார்த்துவிட்டு அங்கிருந்து லிம் நடந்து சென்றுவிட்டார். வழிப்போக்கர் ஒருவர் தீ பரவுவதைப் பார்த்துவிட்டு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.