'வாட்ஸ்அப்' மோசடி: போலிசார் எச்சரிக்கை

'வாட்ஸ்அப்' மோசடி: போலிசார் எச்சரிக்கை

1 mins read

'வாட்ஸ்அப்' ஊடுருவப்பட்டு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கும் பட்சத்தில் ஒருவருடைய வாட்ஸ்அப் கணக்கை மோசடிக்காரர்கள் கையகப்படுத்தி வருவதாக போலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒருவரின் வாட்ஸ்அப் ஊடுருவப்பட்டதாக முதலில் அவர் இருந்த 'குரூப்'பில் ஒரு போலித் தகவலை மோசடிக்காரர் பகிர்ந்துகொள்வார். இது சரிபார்ப்புக் குறியீடு பெறுவதற்கான ஒரு கோரிக்கைக் குறிப்பாக இருக்கும்.

இதையடுத்து அந்த 'குரூப்'பில் உள்ள மற்றவர் களை ஊடுருவலுக்கு ஆளாகியுள்ளதாக நம்ப வைத்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அனுப்பப்படும் சரிபார்ப்புக் குறியீடுகளை மோசடிக்காரர் பகிர்ந்துகொள்ள செய்வார். ஆனால் பகிர்ந்துகொண்ட உடனே மோசடிக்காரர் அந்தக் குறியீட்டைக் கொண்டு 'வாட்ஸ்அப்' கணக்கைக் கையகப்படுத்திக்கொள்வார். இம்மோசடி குறித்து வெளிநாடுகளில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.