தொற்றுநோயாக டெங்கி உருவெடுக்கும் அபாயம்

ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக் கையைக் கட்டுப்படுத்த தேசிய சுற்றுப்புற வாரியம் தீவிர முயற் சிகளில் இறங்கியும் டெங்கி இவ்வாண்டு தொற்றுநோயாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒன்பது வாரங் களாக டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது. அத்துடன் அதிக எண் ணிக்கையில் டெங்கி சம்பவங் கள் பதிவான இடங்கள் நாட்டில் 80 என்று கண்டறியப்பட்டுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தை ஒப் பிடுகையில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

இதுவரை கிட்டத்தட்ட 4,200 பேர் டெங்கி நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இது சென்ற ஆண்டு முழுவதற் கும் பதிவான தொற்றுநோய் சம் பவங்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.

சென்ற வாரம் மட்டும் 379 பேர் டெங்கி தொற்றுநோயால் பாதிக்கப் பட்டனர். ஒரே வாரத்தில் பதிவான இந்த எண்ணிக்கையே கடந்த மூன்று ஆண்டுகளில் ஆக அதி கம் என்று கூறப்பட்டது.

மேலும் டெங்கியால் ஏற்படக் கூடிய விஷக் காய்ச்சலும் கூடுதல் எண்ணிக்கையில் பதிவாகி வரு கிறது. இவ்வாண்டு மட்டும் இது வரை 31 பேர் இவ்வாறு பாதிக் கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு வருட மும் பதிவான மொத்த எண்ணிக் கையைக் காட்டிலும் இது கூடு தலாக உள்ளது.

‘டென்2’ என்ற வகை டெங்கித் தொற்றுநோய் 2016ஆம் ஆண்டில் இருந்தே உச்ச நிலையில் இருந்து வருவதாக சுகாதார அமைச்சு இதன் தொடர்பில் கூறியது.

இந்த ‘டென்2’ வகை அடிக்கடி டெங்கித் தொற்றுநோயுடன் வேறு கடுமையான நோயுடன் கூடிவரும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. டெங்கித் தொற்று நோயால் இவ்வாண்டு இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் மூவருமே 70 வயதில் உள்ள முதியோர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!