காதல் மோசடி விவகாரத்திற்குத் தன் வங்கிக் கணக்கைப் பயன் படுத்திக்கொள்ள அனுமதித்த பெண், பின்னர் அதிலுள்ள பணத் தைத் தானே வைத்துக்கொண் டார். நேற்று பண மோசடி தொடர் பான குற்றச்சாட்டைப் பகுதிநேர ஆங்கில ஆசிரியரான கிறிஸ்டினா சியொங் யொக் லின் (படம்), 63, ஒப்புக்கொண்டார்.
இணையம் மூலம் சியொங், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 'கொலின்ஸ்' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவரைச் சந்தித்தார். தான் கடன் பிரச்சினையில் சிக்கி யிருப்பதாக சியொங் கூற, அவரின் வங்கிக் கணக்கை கொலின்சின் முதலாளியுடைய நண்பர் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று கொலின்ஸ் கோரினார். சியொங்கும் தன் வங்கிக் கணக்கைப் பயன்படுத் திக்கொள்ள அனுமதித்தார். வங் கிக் கணக்கில் கிட்டத்தட்ட $50,030 போடப்பட்டது.
கொலின்ஸ் 54 வயதுடைய வேறு ஒரு பெண்ணை ஏமாற்றிப் பெற்ற பணம் அது என்று சியொங்கிடம் கூறவில்லை. பின் னர் தன் முதலாளியின் நண் பருக்கு $50,000 தருமாறு கொலின்ஸ் கேட்டுக்கொண்டது சியொங்குக்கு சந்தேகத்தை ஏற் படுத்தியது.
ஆனால் சியொங் போலி சாரிடம் தெரிவிக்காமல், சொன்ன இடத்தில் சேர்க்காமல் பணத்தைத் தானே வைத்துக்கொண்டார். கொலின்ஸ் பலமுறை பணத் தைத் திரும்பக் கேட்டும் சியொங் காரணங்கள் கூறித் தட்டிக்கழித் ததுடன் கொலின்சிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருவதை யும் தடை செய்தார்.
இதைத் தொடர்ந்து சியொங் அப்பணத்தில் $31,000ஐ ஒரு மலேசிய வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிட்டார். தான் காதலிக்கும் ஓர் ஆடவருக்கு உதவுவதற்காக அவரின் வங்கிக் கணக்கில் சியொங் பணத்தைப் போட்டார்.

