பிள்ளைகள் வாழ்வதற்குத் தலை சிறந்த நாடுகளின் வரிசையில் இரண்டாவது ஆண்டாக சிங்கப் பூருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. 'சேவ் த சில்ட்ரன்' என்ற சிறார் நல அமைப்பின் வருடாந்திர அறிக்கை இத்தகவலை வெளியிட் டுள்ளது.
நேற்று வெளியீடு கண்ட உலக ளாவிய பிள்ளைப்பருவ அறிக்கைப் படி, 176 நாடுகள் கொண்ட பட் டியலில் சிங்கப்பூர், எட்டு மேற்கத் திய நாடுகளையும் ஆசிய நாடான தென்கொரியாவையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பெற்றதாகக் கூறப்பட்டது.
பிள்ளைகளுக்குச் சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, ஊட்டச்சத்து, பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கு வதன் தொடர்பில் நாடுகள் தர வரிசைபடுத்தப்பட்டன.
பிள்ளைப்பருவக் குறியீட்டில் சிங்கப்பூர் ஆயிரத்திற்கு 989 புள்ளிகளைப் பெற்று முதல் நிலை யைப் பெற்றது. இதற்குப் பிள் ளைகள் இறப்பு விகிதம், கல்வி வாய்ப்புகள், குழந்தைத் தொழில், குழந்தைத் திருமணம், பதின்ம வயதில் கருவுறுதல் போன்ற மொத்தம் எட்டு பிரிவுகள் ஆராயப் பட்டன. கடந்தாண்டு சிங்கப்பூரும் சுலோவேனியாவும் இணையாக முதல் இடத்தில் இருந்தன.
2017ஆம் ஆண்டில், சிங்கப் பூரில் உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளில் உயிரிழக்கும் குழந்தைகளின் விகிதம் 2.8 விழுக்காடாக இருந்ததாக அதி காரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டு கின்றன. 19 வயதுக்குக் குறை வான 100,000 பேரில் இறப்பு விகி தம் 0.1 விழுக்காடு என்றும் கூறப்பட்டது.

