உரிமம் பெறாத கடன் நிறுவனங் களிடம் $8,000 தந்ததற்காக ஆவ் ஃபூ வா, 53, தன் மகனைக் கத்தியால் குத்தினார். நேற்று ஆவ், தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் தொடர்பில் அவருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மகன் திரு பொல் அவ் வய் ஹாவ், 25, தன்னிடம் அனுமதி பெறாமல் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததன் தொடர்பில் தந்தை, மகனுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என்று மகனை நோக்கி ஆவ் கேட்டபோது, அவரிடமிருந்து பதில் வரவில்லை. இதனையடுத்து ஆவ் மேசைக்குக் கீழ் இருந்த ஒரு கத்தியை எடுத்து மகனைக் குத்த முயற்சி செய்தார்.
இருவருக்கும் இடையே நடந்த மோதலில் மகனின் இடுப்புப் பகுதியில் தந்தை கத்தியால் குத்திவிட்டார். பின்னர், ஆவ்வின் மகள் போலிசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
உரிமம் இல்லாத கடன் நிறு வனங்களிடமிருந்து கடன் வாங் கியதாலும் தன்னுடைய கடன் அட்டையை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாலும் கோபம் அடைந்த ஆவ் தன் மகனுடன் சண்டை போட்டதாகக் கூறப்பட் டது.

