நாணயத்தைத் தவறாகக் கையாண்டதன் தொடர்பில் சிங்கப்பூர் உட்பட மேலும் நான்கு நாடுகளைக் கண்காணிப்புப் பட்டியலில் அமெரிக்கா சேர்த்து உள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட அமெரிக்க கருவூல அறிக்கை கூறியது. இவ்வாறு நாணயத்தைத் தவறாகக் கையாண்டு தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் நட வடிக்கைகளில் சிங்கப்பூர் ஈடுபடுவதில்லை என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் பதிலளித்து உள்ளது. அத்துடன் நாணய பரிமாற்று விகிதத்தை ஒட்டித்தான் சிங்கப் பூரின் நாணயக் கொள்கை கட் டமைப்பு அமைந்துள்ளது என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியது.
சென்ற ஆண்டு மட்டும் கிட் டத்தட்ட 17 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய அந்நியச் செலாவணி கொள்முதல் சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ளதாக அறிக்கை தெரிவித்தது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. இதைச் சுட்டிய அறிக்கை, சிங்கப்பூருடன் அயர்லாந்து, இத்தாலி, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளையும் சேர்த்துக் கொண்டது.
அத்துடன் பட்டியலிலிருந்து இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் அகற்றப்பட்டன.

