2022ஆம் ஆண்டில் எட்டு புதிய பாலர் பள்ளிகள் திறப்பு

2022ஆம் ஆண்டில் எட்டு புதிய பாலர் பள்ளிகள் திறப்பு

1 mins read
3ed9699b-ce78-43f6-9a83-406d91eae6f9
-

2022ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் எட்டு புதிய பாலர் பள்ளிகள் தீவு முழுவதும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த கட்டணத்தில் தரமான பாலர் பள்ளிகளைப் பெற்றோர்கள் தேர்வு செய்யும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. தொடக்கப்பள்ளி வளாகத் திலேயே அமையவிருக்கும் இந்த எட்டு புதிய பாலர் பள்ளிகளில் முழுநேர பிள்ளை பராமரிப்புச் சேவைகளும் வழங்கப்படும்.

இவற்றைச் சேர்த்து நாட்டில் உள்ள மொத்த கல்வி அமைச்சு பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை 43 ஆகும். இவற்றில் கிட்டத்தட்ட 5,800 பிள்ளைகளுக்கு இடம் இருக்கும். செம்பவாங், நார்த் வியு, ஜூரோங் வெஸ்ட், கொங்ஷங், ஜுன்யுவென், ஜிங்ஷான், அங் மோ கியோ மற்றும் தெம்பனிஸ் நார்த்தில் அமையவுள்ள புதிய தொடக்கப்பள்ளிகளில் இந்தப் புதிய பாலர் பள்ளிகள் அமைந்து இருக்கும்.

இப்புதிய பாலர் பள்ளிகளுடன் இரண்டு மாதம் முதல் நான்கு வயது குழந்தைகளுக்காக இயங்கி வரும் 'பிசிஎஃப் ஸ்பார்கல்டோட்ஸ்' ஆரம்பகாலக் கல்வி நிலையங்களுடன் இணைந்து செயல்படவுள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி ஆரம்பகால கல்வி நிலையங்களில் படித்து முடிக்கும் பிள்ளைகள் சிங்கப்பூரராகவோ நிரந்தரவாசியாகவோ இருந்தால் அவர்கள் வீட்டருகிலுள்ள கல்வி அமைச்சு பாலர் பள்ளியில் இடம் கிடைப்பது உறுதி.