சுடச் சுடச் செய்திகள்

தேசிய சம்பள மன்றத்தின் பரிந்துரையால் 154,000 ஊழியர்கள் பலனடைவர்

மாதம் $1,400 வரை ஊதியம் பெறும் குறைந்த வருமான ஊழியர்களுக்கு $50 முதல் $70 வரை ஊதிய உயர்வு அளிக்கும்படி தேசிய சம்பளம் மன்றம் பரிந்துரைத்துள்ளது. 

குறைந்த வருமான ஊழியர்களுக் கான ஊதிய வரம்பை $1,300ல் இருந்து $1,400ஆக உயர்த்தியிருப் பதன் மூலம் இவ்வாண்டு இன்னும் 22,000 ஊழியர்கள், அதாவது ஒட்டு மொத்தத்தில் கிட்டத்தட்ட 154,000 ஊழியர்கள் பலனடைவர் என்று தெரி விக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டில் உற்பத்தித் திறனில் மேம்பாடு கண்ட நிறுவனங் கள், அத்தகைய ஊழியர்களுக்கு $200 முதல் $360 வரை ஒருமுறை போனஸ் தருமாறும் மன்றம் பரிந்துரைத்துள்ளது.

மேம்பட்ட வேலைச் சந்தைச் சூழல், உற்பத்தித்திறன், ஊழியரணிப் பயிற் சியின் நடப்புப் போக்குகள் ஆகிய வற்றின் அடிப்படையில் 2019/20 ஆண்டிற்கான வழிகாட்டி நெறிமுறை களைப் பரிந்துரைத்ததாக மன்றம் அறிக்கை மூலம் நேற்று தெரிவித்தது. 

இவ்வாண்டில் சிங்கப்பூரின் பொரு ளியல் 1.5% முதல் 2.5% வரை உயரும் என மன்றம் கணித்துள்ளது. 

பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், கடந்த ஆண் டில் மொத்த ஊதியம் சராசரியாக 4.2% உயர்ந்தது என்று மனிதவள அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித் திருந்தது. 2017ஆம் ஆண்டில் இந்த விகிதம் 3.7 விழுக்காடாக இருந்தது. 

தொழிலிலும் வர்த்தகத்திலும் நல்ல ஏற்றம் கண்ட நிறுவனங்கள், ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை போன்ற வகையில் தங்களது ஊழியர் களுக்கு  வெகுமதி அளிக்கவேண்டும் என மன்றம் கேட்டுக்கொண்டது.

சில நிறுவனங்களுக்குக் கடந்த ஆண்டு நல்லவிதமாக அமைந்திருக் கலாம். ஆனால், இந்த ஆண்டிலும் அதே போக்கு தொடரும் என்ற நிச்சய மில்லாத நிலை இருக்கலாம். அத்த கைய நிறுவனங்கள் ஊதிய உயர்வில் மிதமான போக்கைக் கையாளலாம் என்றும் அதே நேரத்தில் நிறுவனத்தின் செயல்பாடு, ஊழியர்களின் பங்களிப்பு ஆகியவற்றுக்கு ஏற்றபடி ஊக்கத் தொகை அளிக்கலாம் என்றும் மன்றம் தெரிவித்தது.

நிறுவனங்கள் தங்களது ஊழியர் களுக்குக் கட்டமைக்கப்பட்ட பயிற்சி களை வழங்கவேண்டும் என மன்றம் பரிந்துரைத்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon