அறவே விரயமற்ற சிங்கப்பூரை சாதிக்க குழு விவாதம்: மறுபுழக்கத்தை அதிகரிக்கும் வழிகளைக் காண முயற்சி

அறவே விரயமற்ற சிங்கப்பூரை சாதிக்க குழு விவாதம்: மறுபுழக்கத்தை அதிகரிக்கும் வழிகளைக் காண முயற்சி

1 mins read
e22e830a-4996-44e9-a0d9-6585cab61b20
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு மறுபுழக்க விகிதம் 22% ஆக இருந்தது. இது ஜெர்மனி, ஆஸ்திரியா, தென்கொரியா ஆகிய நாடுகளின் அளவைவிட மிகவும் குறைவு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கழிவுப்பொருட்கள் அதி கரித்து வருகின்றன. அதற்கு ஈடுகொடுக் கும் அளவிற்கு மறுபுழக்க அளவு இல்லை. மறுபுழக்கத்தை அதிகரிப்பதற்கான வழி முறைகளைக் கண்டறிய அனைத்து தரப் பினரும் நேற்று கைகொடுத்தனர்.

அரசாங்க அமைப்புகள், நிறுவனங் களின் தலைவர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய குழு விவாதிப்பு மூலம் அத்தகைய மறு புழக்க வழிகளைக் கண்டறிவதற்கான முயற்சி இடம்பெற்றது.

சிங்கப்பூரை அறவே விரயமற்ற நாடாக்குவதற்கான வழிமுறைகளைக் காணும் நோக்கத்தில் அந்த விவாதிப்பு நடந்தது. கழிவுப்பொருட்களை நிர்வகிப் பதில் தயாரிப்பாளர்களின் பங்கை வரை யறுப்பது, சமூக நடத்தைகள், கொள்கை உருவாக்கம் முதலான முக்கிய அம்சங் கள் பற்றி விவாதிக்கப்பட்டன.

பினாங்கு ரோட்டில் இருக்கும் 'ரிக்கோ பிரிண்டிங் இன்னோவேஷன் சென்டர்' என்ற நிலையத்தில் நடந்த அந்தக் குழுக் கூட்டத்தில் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் தலைமை நிர்வாகி திரு டான் டெங் டூய் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.

"விரயத்தைக் கூடுமான வரையில் குறைக்க வேண்டும் என்ற சிங்கப்பூரின் அணுகுமுறைக்கு ஆதரவான கொள்கை களையும் விதிமுறைகளையும் சட்ட ஏற் பாடுகளையும் தேசிய சுற்றுப்புற வாரியம் உருவாக்கும்.

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு மறுபுழக்க விகிதம் 22% ஆக இருந்தது. இது ஜெர்மனி, ஆஸ்திரியா, தென்கொரியா ஆகிய நாடுகளின் அளவைவிட மிகவும் குறைவு.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்