சுடச் சுடச் செய்திகள்

ஊதுபத்தியால் தீ: புகை சூழ்ந்து, முச்சுத் திணறி முதிய மாது மரணம்

திருவாட்டி லிம் மாங் யின் என்ற 83 வயது மாது, கங்சா ரோடு, புளோக் 165ல் உள்ள தன்னுடைய புதல்விகளின் வீட்டில் 2018 நவம்பர் 30ஆம் தேதி ஊதுபத்தியால் தீ மூண்டதன் காரண மாக ஏற்பட்ட புகையைச் சுவாசித்து மூச்சுத் திணறி மாண்டுவிட்டார் என்று நேற்று மரண விசாரணையில் தெரிவிக் கப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்ததற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அந்தச் சக்கர நாற்காலி மாது தன்னுடைய புதல்விகளின் வீட்டில் வசிக்க அங்கு குடியேறி இருந்தார். சம்பவம் நிகழ்ந்த நாளன்று வீட்டினுள் சிகரெட் புகை காரணமாக வந்த துர்நாற்றத்தைப் போக்குவதற்காக அந்த மாதின் இளைய புதல்வி ஊதுபத்தியை ஏற்றிவைத்து விட்டு உணவு வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றிருந்தார். 

அப்போது அந்த வீட்டின் சன்னல்கள் மூடப்பட்டு இருந்தன. வாசல் கதவு மட்டும் திறந்திருந்தது. தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. காற்றாடி சுற்றிக் கொண்டு இருந்தது. சாப்பாடு வாங்கச் சென்ற பெண் வீட்டிற்கு வந்தபோது அங்கே குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரிகள் இருந்ததைக் கண்டார். 

அந்த வீட்டில் மூண்டிருந்த தீ 20 நிமிடங்களில் அணைக்கப்பட்டது. 

திருவாட்டி லிம்மின் உடல் வீட்டின் தரையில் கிடந்தது. மாண்டது திருவாட்டி லிம்தான் என்பது மரபணுச் சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon