சுடச் சுடச் செய்திகள்

ஜுவல் வலைப்பூங்கா, சாங்கி அனுபவக்கூடம் ஜூன் 10ல் திறப்பு

சாங்கி விமான நிலையத்தின் ஜுவல் வளாகத்தில் ஜூன் மாதம் 10 முதல் ‘கனோபி பார்க்’ என்ற வலைப்பூங்கா  அழகைப் பார்வையாளர்கள் அனுபவிக்கலாம். 

ஜுவல் வளாகத்தின் ஐந்தாவது மாடியில் அமைந்து இருக்கும் 14,000 சதுர மீ. பரப்பளவைக் கொண்டுள்ள அந்தப் பூங்காவில் 10 கவர்ச்சி அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. 23 மீ. உயரத்தில் தொங்கும் 50 மீ. நீள கண்ணாடி தரைப்பாலம் அந்தக் கவர்ச்சி அம்சங்களில் ஒன்றாக இருக்கும். அதிலிருந்து பலவற்றையும் பார்வையாளர்கள் பார்த்து வியக்க முடியும். வலையில் நடந்து செல் லும் அனுபவத்தையும் பார்வை யாளர்கள் பெறலாம். 

வலைப்பூங்காவில் தோட்டங் களும் இருக்கும். இந்தக் பூங்கா வுக்குச் செல்ல சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கு $4.50 கட்ட ணம். மற்றவர்கள் $5 கட்டணம் செலுத்தவேண்டும். பூங்கா உள்ளே பல கவர்ச்சிகளையும் அனுபவிக்க தனித்தனி கட்டணம் நடப்பில் இருக்கும். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon