உலகம் செழிக்க அமெரிக்க, சீன நல்லுறவு அவசியம்

உலகம் செழிக்க அமெரிக்க, சீன நல்லுறவு அவசியம்

1 mins read

அமெரிக்காவும் சீனாவும் புதிய யதார்த்த நிலவரங்களை ஏற்றுக் கொண்டு, உலகளவில் தங்களுக் குள்ள பொறுப்புகளை உணர்ந்து கொண்டு, தங்களுக்கு இடையில் நம்பிக்கையை மறுஉறுதிப்படுத்தி, உலக ஒழுங்கை நிலைப்படுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.

அதேவேளையில், விதிமுறை களை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பு வர்த்தக முறையைப் பலப் படுத்த ஆசியா தன் முயற்சிகளை இரண்டு மடங்காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதோடு மட்டுமின்றி, இந்த முறையை மேம்படுத்தும் நோக்கத் தில் ஆசியா உலக சமூகத்துடன் சேர்ந்து பாடுபட வேண்டும் என்றும் திரு ஹெங் கேட்டுக்கொண்டார்.

"உலகமயமான ஓர் ஏற்பாட்டின் அங்கமாக நாம் இருந்தால் மட் டுமே எல்லா நாடுகளும் சேர்ந்து பாடுபட வேண்டும் என்ற இலக்கு நிறைவேறும்," என்றாரவர்.

உலகம் இரண்டு பகுதிகளாக, தனித்தனியான இரண்டு முறை களை, பொருளியலை, தொழில் நுட்பங்களைக் கெண்டதாக பிளவு பட்டு இருக்கும்போது இந்த இலக்கை நிறைவேற்ற முடியாது என்றார் துணைப் பிரதமர்.