சொத்து விலை உயர்வைக் கட்டுப்படுத்து வதற்காக நடப்புக்கு வந்த நடவடிக்கைகள் அந்த விலையை நிலைப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்றி இருக் கின்றன என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
அத்தகைய நடவடிக்கைகள் நடப்புக்கு வந்ததற்கு முன்பாக, சென்ற ஆண்டு சொத்துச் சந்தை விலைகள் மிகவும் அதிக ஏற்றம் கண்டன என்று புளூம் பர்க் தொலைக்காட்சிக்கு சிங்கப்பூரில் அளித்த பேட்டியில் திரு வோங் கூறினார். சொத்து விலையேற்ற வேகத்தைக் குறைப் பதற்காக 2018 ஜூலையில் அரசு பல நட வடிக்கைகளை அமலாக்கியது.
இரண்டாவது வீடு வாங்குவோருக்கு முத்திரை வரி உயர்த்தப்பட்டது. நிதி நிறுவனங்கள் வழங்கும் வீட்டுக் கடன் களுக்கான வரம்பு கடுமையாக்கப்பட்டது.
இத்தகைய நடவடிக்கைகள் சொத்து களின் விலையைக் குறைக்க இடம்பெற வில்லை என்றும் அவற்றை நிலைப்படுத்து வதற்காக இடம்பெற்றன என்றும் இந்த இலக்கு நிறைவேறி இருக்கிறது என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் சொத்து வாங்குவது நல்ல முதலீடாக இருக்கும் என்று வெளி நாட்டு முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எப்போதுமே சிங்கப்பூரில் சொத்து வாங்குவதில் நாட்ட மாக இருப்பார்கள் என்றார் திரு வோங்.
ஹாங்காங்கில் சொத்து விலைகள் எப்போதுமே ஏறுமுகமாக இருக்கும். ஹாங்காங் சொத்துகள் மீதே ஒருமித்த கவனம் செலுத்தி வந்த முதலீட்டாளர்கள் சிங்கப்பூர் மீது தங்கள் கவனத்தை திருப்புவது பற்றி கேட்டபோது இவ்வாறு கூறிய அமைச்சர், இருந்தாலும் சிங்கப்பூர் சொத்து விலைகளைத் தொடர்ந்து கண் காணிக்கும் என்றும் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் சொத்துச் சந்தையில் முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
ஆனால் சிங்கப்பூரின் சொத்துகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிலவக் கூடிய தேவைகள் காரணமாக அச்சொத்து களின் விலை, அடிப்படைகளை மீறும் வேகத்தில் உயரவில்லை என்பதை உறுதி படுத்த சிங்கப்பூர் விரும்புகிறது என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் திரு வோங் குறிப்பிட்டார்.

