போலியான செய்திகளை ஒடுக்க 9 நாடுகள் இணக்கம்

போலியான செய்திகளை ஒடுக்க 9 நாடுகள் இணக்கம்

1 mins read

இணையத்தில் இடம்பெறக்கூடிய போலியான செய்திகளை எதிர்த்துப் போராட ஒன்பது நாடுகள் இணங்கி உள்ளதாக சட்ட மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் அறிவித்தார். கனடாவில் ஓட்டாவா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

"பல்வேறு நாடுகளின் சட்டத்துறை வல்லுநர்களை சிங்கப்பூர் சந்தித்தது. அதன் மூலம் பலதரப்பட்ட கருத்து களைப் பரிசீலிக்க சிங்கப்பூருக்கு வாய்ப்பு கிடைத்தது. சிங்கப்பூர் போலியான செய்திகளுக்கு எதிரான சட்டத்தை உருவாக்கியதில் அந்தக் கருத்துகள் உதவின," என்று அமைச்சர் கூறினார்.

இந்தச் சட்டம் சிங்கப்பூரில் இம்மாதம் நிறைவேறியது. கனடாவில் நடந்த உலக 2வது பெருங்குழுக் கூட்டத்திற்கு முன்னதாக லண்டனில் சென்ற நவம்பரில் முதல் கூட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, லாட்வியா, பிரிட்டன் போன்ற நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.