கோஜெக் ஓட்டுநர்களுக்குப் புதிய வெகுமதித் திட்டம்

கோஜெக் நிறுவனம் தன் வாகன ஓட்டுநர்களுக்கு ஒரு புதிய வெகுமதிச் செயல்திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. அந்தப் புதிய நிறுவனம் சிங்கப்பூரில் செயல்படத் தொடங்கிய முதல் ஆறு மாத காலத்தில் அதன் வாகனங் கள் 10 மில்லியன் தடவை சேவையாற்றி இருப்பதாகவும் அறிவித்து உள்ளது. 

   கோஜெக் நிறுவனத்தின் ‘வாகன ஓட்டுநர் பயணத் தொலைவுச் செயல்திட்டம்’ என்ற அந்த வெகுமதித் திட்டம் 1,000, 2,500, மற்றும் 5,000 தடவை சேவை வழங்கி இருக்கும் ஓட்டுநர்களுக்கு மேம்பட்ட நன்மைகளை தருகிறது. சிங்டெல் நிறுவனத்துடன் பங்காளித்துவ உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ள கோஜெக் நிறுவனம், அந்த இணக்கத்தின் கீழ் தன்னுடைய வாகன ஓட்டுநர்களுக்கு கையடக்கத் தகவல் சேமிப்பு வசதிகளையும் வழங்குகிறது.

இதை ‘கோல்பெட்டர்’ என்ற தனது செயல்திட்டத்தை மேம்படுத்தி அதன்மூலம் அந்த நிறுவனம் வழங்குகிறது.  

இந்தச் செயல்திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி குறிப்பிட்ட ஓட்டுநர்களுக்காக நடப்புக்கு வந்தது. இது ஜூன் முதல் எல்லா ஓட்டுநர்களுக்கும் உரியதாக இருக்கும்.

போட்டி நிறுவனமான கிராப், மேம்படுத்தப் பட்ட வாகன ஓட்டுநர் செயலி ஒன்றை இந்த மாதம் வெளியிட்டது. அதில் ஓட்டுநருக்கான வெகுமதி ஏற்பாடும் உள்ளடங்கும்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon