பாதுகாப்பு தொடர்பான கவலைகள் நிலவும் நிலையில் நிலப் போக்குவரத்து ஆணையம் தனிநபர் நடமாட்ட சாதனங்களைப் பகிரும் நிறுவனங்களின் செயல்பாடு குறித்த தனது முடிவைத் தள்ளிவைத்திருக்கிறது.
தனிநபர் நடமாட்ட சாதனங்களைப் பகிரும் சேவையை வழங்க முற்படும் நிறுவனங்கள், கட்டுப்பாடுகளுடன் கூடிய உரிமங்களுக்கு விண்ணப்பித்துள்ளன. விண்ணப்பத்தின் முடிவுகளை இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் அறிவிக்கப்போவதாக முன்னர் கூறியிருந்த நிலப்போக்குவரத்து ஆணையம் , மூன்றாம் காலாண்டில் அறிவிக்கப்போவதாகக் கூறியது.
சாதனப் பயனீட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரசீலிக்க நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

