தேவையின்பேரிலான பேருந்து சேவை திட்டம் அறிமுகம் செய்யப்படாது

தேவையின்பேரிலான பேருந்து சேவை திட்டம் அறிமுகம் செய்யப்படாது

2 mins read

தேவையின்பேரிலான பேருந்து சேவைத் திட்டம் அறிமுகப்படுத்தப் படாது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

தொலைபேசிவழி முன்பதிவு செய்யப்படும் டாக்சி சேவையைப் போல இயக்கப்படும் தேவையின் பேரிலான பேருந்துச் சேவையை ஆணையம் சோதித்துப் பார்த்து வருகிறது. இந்த ஆறு மாத சோதனை முயற்சி இம்மாதம் 15ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என ஆணையம் அறிவித்துள்ளது. ஜூ கூன், டௌன்டவுன் வட்டாரங் களில் இந்தச் சோதனை முயற்சி இடம்பெற்று வருகிறது.

நிலையான வழித்தடங்களில் இயக்கப்படும் வழக்கமான பேருந்து களைக் காட்டிலும் தேவையின் பேரில் பேருந்துகளை இயக்க அதிகம் செலவாகிறது என்பது இதுநாள் வரையிலான சோதனை முயற்சியில் தெரியவந்தது.

"பயணத் தொலைவு மிச்சமா கிறது. அதே நேரத்தில், தொழில் நுட்பச் செலவு அதிகமாக உள்ள தால் இத்தகைய தேவையின்பேரி லான பேருந்துகளை இயக்குவதற் கும் அதிக செலவாகிறது," என்று ஆணையம் தெரிவித்தது.

நிலையான, அட்டவணைப்படி இயக்கப்படும் பேருந்து சேவை களைக் காட்டிலும் அதே வழித் தடத்தில் தேவையின்பேரில் இயக் கப்படும் பேருந்துகளின் பயணத் தொலைவு 18% குறைவாக இருப் பது சோதனை ஓட்டத்தில் தெரிய வந்தது. இது, அந்தக் குறிப்பிட்ட வழித்தடத்திற்குக் குறைவான பேருந்துகளே போதும் என்பதைக் காட்டுகிறது. ஆனாலும், மென் பொருள் மேம்பாட்டுச் செலவுகள் அதிகமாக இருப்பதால் இப்போ தைக்கு தேவையின்பேரில் பேருந்து களை இயக்குவதற்கு அதிக செலவாகிறது எனக் கூறப்பட்டது.

இருப்பினும், "தொழில்நுட்பச் செலவுகள் குறையும்போது எதிர் காலத்தில் தேவையின்பேரில் அதிகமான அளவில் இயக்கப்பட லாம் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று ஆணையம் குறிப்பிட்டது.

அத்துடன், ஓட்டுநரில்லாப் பேருந்துகள் தயாரானபின் இந்த முறை செயல்திறன்மிக்கதாக இருக்கும் என்றும் ஆணையம் கூறியது.