சிவப்பு விளக்கு எரிந்தாலும் இனி நிற்காமல் செல்லலாம்

சிவப்பு விளக்கு எரிந்தாலும் இனி நிற்காமல் செல்லலாம்

1 mins read
700781c9-b5d7-40ec-8a7d-52fc50581002
அவசர மருத்துவ வாகனங்களைப்போல தீயணைப்பு வண்டிகள், தீயணைப்பு மருத்துவ வாகனங்கள், ரெட் ரைனோ போன்ற குடிமைத் தற்காப்பு வாகனங்களும் அவசரகாலங்களில் போக்குவரத்து சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் இனி நிற்காமல் பயணம் செய்யலாம். கோப்புப்படம் -

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசரகால வாகனங்கள் போக்குவரத்து சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் இனி நிற்காமல் செல்லலாம்; அனுமதிக் கப்படாத இடங்களில் U-வளைவு களை மேற்கொள்ளலாம். இந்த மாற்றங்கள் இன்று முதல் நடப்பிற்கு வருகின்றன. இதுநாள் வரை அவசர மருத்துவ வாகனங்களுக்கு மட்டுமே சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் இப்படி விதிவிலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் இனி தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு மருத்துவ வாகனங் கள், ரெட் ரைனோ ஆகிய குடிமைத் தற்காப்புப் படையின் அவசரகால வாகனங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், சாலையைப் பயன்படுத்துவோர் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக அந்த வாகனங்களை இயக்கும் அதிகாரிகள் குடிமைத் தற்காப்புப் படையின் நடைமுறை களுக்கு இணங்கி நடக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, குடிமைத் தற்காப்புப் படையின் அவசரகால வாகனத்தை இயக்கும் ஓட்டுநர், போக்குவரத்து சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் தொடர்ந்து வாகனத்தை இயக்க முற்படும் அல்லது அனுமதிக்கப்படாத இடத்தில் U-வளைவு மேற்கொள்ள முற்படும் பட்சத்தில் அவர் எச்சரிக்கை ஒலியை எழுப்ப வேண்டும்; சாலைப் பயணிகளை விழிப்பூட்டும் விதமாக விட்டு விட்டு ஒளிரும் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.சாலைச் சந்திப்பை நெருங்கும் போது வாகனத்தின் வேகத்தைக் குறைத்து, முற்றிலும் நிறுத்தி, தொடர்ந்து வாகனத்தை இயக்கு முன் போக்குவரத்து நிலைமையை அவர் மதிப்பிட வேண்டும்.