முதல் நான்கு மாதங்களில் 112 மின்வர்த்தக மோசடிகள்

முதல் நான்கு மாதங்களில் 112 மின்வர்த்தக மோசடிகள்

1 mins read

இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 112 மின்வர்த்தக மோசடிகள் தொடர்பில் புகார்கள் வந்ததாக போலிஸ் தெரிவித்துள்ளது.

அவற்றுள் பெரும்பாலானவை ஹோட்டல் அறைகள் முன்பதிவு, சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுச்சீட்டுகள், குறிப்பாக 'யூனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர்' நுழைவுச்சீட்டுகள் தொடர்பானவை. இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் செலுத்திய பின்னர் நுழைவுச்சீட்டுகள் தரப்படவில்லை அல்லது செல்லத்தகாத நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன என்று போலிஸ் கூறியது.

ஹோட்டல் அறைகள் முன்பதிவு, நுழைவுச்சீட்டுகள் தொடர்பான இணையவழி விளம்பரங்கள் பார்ப்பதற்கு உண்மையானவை போலவே தோன்றலாம் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி போலிஸ் அறிவுறுத்தி இருக்கிறது. அத்துடன், விற்பனையாளர்களைப் பற்றிய விவரங்களை ஆராயுமாறும் போலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.