எரிபொருளாகப் பயன்படுத்தும் நோக்கில் ஹைட்ரஜனை இறக்குமதி செய்வது குறித்து சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது. ஹைட்ரஜனை இறக்குமதி செய்வது, அதனை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்த ஆலோசனை ஆய்வில் பங்குகொள்ள பிரதமர் அலுவலகம் ஏலக்குத்தகை விடுத்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இம்மாதம் 11ஆம் தேதி என்ற நிலையில் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம், ஹைட்ரஜன் விநியோகிப்பாளர்கள் உட்பட குறைந்தது ஆறு நிறுவனங்கள் ஏற்கெனவே விண்ணப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
எரிபொருளாக ஹைட்ரஜன்: ஆய்வு
1 mins read

