$47,000 கையாடிய சமூக ஊழியர்

$47,000 கையாடிய சமூக ஊழியர்

1 mins read

தாதிமை இல்லத்தில் இருந்த இரு முதியவர்கள் தன்னை நம்பிக் கொடுத்த ஏடிஎம் அட்டைகளைக் கொண்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து $47,000க்கும் அதிகமான தொகையைக் கையாடல் செய்தார் ஜோனி சோங் சியாங் சியாங், 38, என்ற மருத்துவ சமூக ஊழியர்.

தன் மீதான இரு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளையும் அப்பெண் ஒப்புக்கொண்டார். காம்பஸ்வேல் வாக்கில் உள்ள கிரேஸ் லாட்ஜ் தாதிமை இல்லப் பராமரிப்பில் இருந்த திரு ஹோ பார்க் டோங், 77, திரு ஹான் லீ ஃபோங், 80, என்ற இரு முதியவர்களின் ஏடிஎம் அட்டைகளுக்கான ரகசியக் குறியீட்டு எண்களை அறிந்துகொண்டார் ஜோனி. பின் பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களுக்குச் சென்று அவர்களது கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்ததுடன் பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொண்டார். அதன்பின் அந்த ஏடிஎம் அட்டைகளை வீசியெறிந்த அவர், தாதிமை இல்லப் பணியையும் துறந்தார். கையாடல் செய்த பணத்தில் $25,900ஐ அவர் திருப்பித் தந்துவிட்டதாகத் தெரிவிக்கப் பட்டது.