இவ்வாண்டு பிப்ரவரியில் எல்சி கிச்சன் என்ற உணவு விநியோக நிறுவனம் வழங்கிய உணவை உண்டதால் ஐம்பதுக்கு மேற்பட்டோ ரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் உணவுச் சுகாதாரத் தரநிலை 'சி'யாக குறைக்கப்பட்டுள்ளது.
எல்சி கிச்சன் நிறுவனத்தின் உணவை உண்ட 52 பேர் இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெரிந்தன என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தனது இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இடம்பெற்ற விசா ரணையைத் தொடர்ந்து அந்நிறுவ னத்திற்கான உணவு சுகாதாரத் தரநிலை நேற்று முதல் 'சி'யாக குறைக்கப்படுகிறது என்றும் ஓர் ஆண்டுக்குப் பின் அது மறுஆய்வு செய்யப்படும் என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
இடைப்பட்ட காலத்தில் அந்த உணவு விநியோக நிறுவனம் கண்காணிப்பில் வைக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.

