என்டியுசி: திறன் மேம்பட தொழில்நுட்பம் உதவும்

என்டியுசி: திறன் மேம்பட தொழில்நுட்பம் உதவும்

1 mins read

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தித் துறை ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக் கில் நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

தொழிற்சங்கங்கள் இருக்கும் 32 நிறுவனங்கள், ஏழு தொழிற் சங்கங்களுடன் இணைந்து தேசிய தொழிற்சங்க காங்கிரசும் (என்டி யுசி) வேலைவாய்ப்பு, வேலைத் திறன் பயிற்சிக் கழகமும் இந்தக் குழுக்களை அமைக்கவுள்ளன.

தேவன் நாயர் வேலைவாய்ப்பு, வேலைத்திறன் பயிற்சிக் கழகத்தில் நேற்று நடந்த 'ஊழியரணி 4.0' கருத்தரங்கில் இதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத் தானது.

இந்த முயற்சியின்மூலம் 12,000 உள்ளூர் ஊழியர்கள் பலனடைவர் என்றும் அவர்களுள் 70 விழுக் காட்டினர் 'பிஎம்இடி' எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகி கள், தொழில்நுட்பர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.