சிங்கப்பூரர்களிடையே மொழி கற்றல் எனும் விதையை இள வய திலேயே விதைத்தால் அவர்களி டத்தில் மொழியின் மீதுள்ள ஆர் வம் அதிகரித்து அவர்களுக்கு நன்மை பயக்கலாம் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்று கேப்பிட்டோல் சிங்கப்பூர் வளாகத்தில் 34வது சிங்கப்பூர் புத்தகச் சந்தையைத் திறந்து வைத்துப் பேசினார் திரு சான்.
இந்தப் புத்தகச் சந்தைக்கு சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சீன ஊடகக் குழு மம் ஏற்பாடு செய்திருந்தது.
"கற்றல் தொடர்பான விதையை விதைத்து, எதிர்காலத்தில் நிலைமை சாதகமாக இருந்தால் நாம் மொழியை எளிதில் கற்றுக் கொள்ளலாம். வெளிப்புறச் சுற்றுச் சூழல் தேவை, மொழிக்கு முக்கி யத்துவம் அளிக்கும் வேளையில் நாம் மொழியை விரைவில் கற்றுக் கொள்ளுதல் சாத்தியமாகும்," என்றார் அவர்.
பின்னர் இடம்பெற்ற கலந்துரை யாடலில், பொதுவாக சிங்கப்பூரர் களிடமும் சிங்கப்பூர் இளையர் களிடமும் உள்ள வாசித்தல் நிலைமை குறித்து அவர் கவலைப் படுகிறாரா என்று கேட்கப்பட்ட
தற்கு, "அது குறித்து அக்கறைகள் இருந்தாலும் நான் அதுபற்றி அதிகம் கவலைப்படவில்லை. ஒவ் வொரு தலைமுறையும் அதன் சொந்த சவால்களைச் சந்திக்
கிறது. ஆனால், புதிய தலைமுறை அறிவு சார்ந்த அம்சங்களைப் பெறுவதற்குப் பல்வேறு வழிகள் உண்டு.
"முன்பு ஒரு விலை உயர்ந்த கலைக்களஞ்சியத் தொகுப்பை வாங்கி, படித்து மக்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டார் கள். ஆனால், இப்போது மக்கள் இணையத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் தகவல்களைப் பெற்று கற்றுக்கொள்கிறார்கள்.
"இளைய தலைமுறையினர் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்கள் அறிவை வளர்த்துக்கொள் கிறார்களா என்பதுதான் கேள்வி. நல்ல வாய்ப்புகள் இருந்தும் நாம் அவற்றைப் பயன்படுத்திக்கொள் ளாமல் இருப்பதுதான் எனது கவலை," என்று அமைச்சர் விவ ரித்தார்.
"இளம் வயதில் தங்கள் பிள் ளைகளுக்குக் கற்றல் தொடர்பான நடவடிக்கைகளைப் பெற்றோர் அறிமுகப்படுத்தினால் அவர்கள் அதைப் பற்றிக்கொண்டு சிறப்ப டைய வாய்ப்பு உண்டு.
"அதே சமயத்தில் அவர்கள் அதில் சிறப்பாகச் செய்யவில்லை என்று பெற்றோர் அவர்களைத் திட்டினால், அவர்கள் மனமுடைந்து போய்விடுவர். மேலும் அவர்களி டம் கற்றல் அனுபவத்தைப் பெருக்க விளையாட்டுகள் மூலம் போதிக்கலாம்," என்றார் அவர்.

