சிங்கப்பூரிலிருந்து தென்கொரியாவின் இரண்டாம் நகருக்கு விமான சேவை

சாங்கி விமான நிலையத்திலிருந்து தென்கொரியத் தலை நகர் சோலுக்கு 45 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட விமானச் சேவைக்குப் பிறகு இப்போது அதன் இரண்டாம் நகருக்கு சிங்கப்பூரிலிருந்து நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இவ்விரு நாடுகளுக்குமிடையிலான இணைப்பையும் சிங்கப்பூரின் ஆகாயப் போக்குவரத்து மையம் என்ற அந்தஸ்தையும் வலுப்படுத்தும் வகையில் தென்கொரியாவின் இரண்டாவது பெரிய நகரான பூசானுக்கு மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து சில்க்ஏர் தனது சேவையைத் தொடங்கியுள் ளது. கொரியாவின் ஜெஜு ஏர், ஈஸ்டார் ஜெட் விமான நிறு வனங்களும் பூசானிலிருந்து சிங்கப்பூருக்கான சேவைகளை விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தப் புதிய பாதை பயணிகளுக்கு மேலும் வசதியாக இருக்கும்,” என்று சோலில் நேற்று நடைபெற்ற அனைத் துலக ஆகாயப் போக்குவரத்துச் சங்கத்தின் கூட்டத்தில் சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.

2018ல் ஒரு நிறுத்தத்துடன் கூடிய சிங்கப்பூர்-பூசான் சேவையில் பயணம் செய்தோர் எண்ணிக்கை 118,000ஐ எட்டியது என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அது இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்து சுமார் 300,000ஐத் தொடும் என்றும் கொரிய விமான நிலையங்கள் குழுமம் கூறியது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon