உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் இயக்குநர் ஜோங் யிக் மின் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு காலமானார் என்று அவ ரது குடும்பம் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 67. திரு ஜோங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந் தார் என்று அறியப்படுகிறது.
திரு ஜோங் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலை வராகவும் இயக்குநராகவும் 1995 முதல் 2002ஆம் ஆண்டு வரை இருந்து உள்ளார்.
1986 முதல் 1993ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரி வின் இயக்குநராகப் பணியாற்றிய திரு ஜோங், 1993 முதல் 1995ஆம் ஆண்டு வரை தொடர்பு அமைச் சின் நிரந்தரச் செயலாளராகவும் பணியாற்றி பொதுச் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர் 2002ஆம் ஆண்டில் பானம் தயாரிக்கும் நிறு வனமான இயோ ஹியாப் செங்கில் சேர்ந்த திரு ஜோங், அதன் தலை வராகவும் தலைமைச் செயலாக்க அதிகாரியாகவும் பணியாற்றினார்.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தில் 1997ல் சேர்ந்த திரு ஜோங், 1999 முதல் 2005 வரை அதன் தலைவ ராகச் செயல்பட்டார்.
சாங்கி விமான நிலையத்தின் 3வது முனையக் கட்டுமானத் திட் டத்துடன் முனையம் 1, 2 ஆகியவற் றின் மேம்பாட்டுப் பணிகளிலும் திரு ஜோங் குறிப்பிடத்தக்க பங் காற்றியுள்ளார் என்றும் கூறப்பட்டது.

