சுடச் சுடச் செய்திகள்

தண்ணீர் சேமிப்புத் திட்டங்களுக்கு $26 மி.

தண்ணீரை அதிகம் பயன் படுத்தும் தொழில் நிறுவனங்கள் அவற்றின் தண்ணீர் பயன் பாட்டைக் குறைக்க உதவி செய்யும் வகையில் $26 மில்லியன் நிதி வழங்கப்படுகிறது.

பொதுப் பயனீட்டுக் கழகம், தேசிய ஆய்வு அறநிறுவனம் ஆகியவை வழங்கும் இந்த நிதியைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்கள் தண்ணீர் சேமிப்புத் தீர்வுகளை நடைமுறைப்படுத் தலாம்.

தண்ணீர் மறுபயனீட்டு முறை போன்ற தண்ணீர் சேமிப்புத் தொழில்நுட்பங்களைப் பொருத்த ஏற்படும் செலவுகளுக்காக இந்த நிதியைத் தொழில் நிறுவனங்கள் பயன் படுத்தலாம்.

புதிய நிதி குறித்து பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று அறிவித்தது. இந்த நிதியுதவி மூலம் தொழில் நிறுவனங்கள்  சேமிக்கும் தண்ணீரை நாள் ஒன்றுக்கு மூன்று மில்லியன் கேலன் அளவாக உயர்த்த கழகம் விரும்புகிறது.

இது 25,000 குடும்பங் களுக்குத் தேவையான தண் ணீரின் அளவு.

தொழில் நிறுவனங்கள் பயன் படுத்தும் தண்ணீரை குடிநீர் அல்லாத மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்தலாம்.

2060ஆம் ஆண்டுக்குள் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான தண்ணீர் அளவு 70 விழுக்காடு உயரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பொதுப் பயனீட்டுக் கழகத் தின் தொழில்துறை தண்ணீர் தீர்வுகள் நிதி, தண்ணீர் சிக்கன நிதி, ‘லிவிங் லேப்’ நிதி ஆகிய மூன்று நிதித் திட்டங்களி லிருந்து $26 மில்லியன் நிதி பெறப்படுகிறது.

தண்ணீரைச் சேமிக்கும் திட்டங்களுக்கு தண்ணீர் சிக்கன நிதியிலிருந்து நிதியுதவி பெறலாம்.

தொழில்துறை திட்டங்களில் புதிய தீர்வுகளை நடைமுறைப் படுத்துவோருக்குத் தொழில் துறை தண்ணீர் தீர்வுகள் நிதி கைகொடுக்கும்.

தண்ணீரைச் சேமிக்கும் புதிய தொழில்நுட்பங்களின் வர்த்த கத்தை விரைவுப்படுத்த ‘லிவிங் லேப்’ நிதி இலக்கு கொண்டு உள்ளது. 

இதுவரை 22 தண்ணீர் சேமிப்புத் திட்டங்களை நடை முறைப்படுத்த கழகம் உதவி உள்ளது.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஐந்து மில்லியன் கேலன் தண்ணீர் மிச்சப்படுத்தப்படு கிறது.

நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்று குழந்தை களுக்கான பால் மாவைத் தயாரிக்கும் ‘வயத் நியூட்ரிஷ னல்ஸ்’  நிறுவனத்தின் திட்டமும் அடங்கும்.

உயர் செயல்பாட்டுத் திறன் கொண்ட ‘ரிவர்ஸ் ஓஸ் மோசிஸ்‘முறையைப் பயன்படுத்தி தண்ணீரை மறுபயனீடு செய்ய பயன்படுத்தும் வசதியை அந்நிறுவனம் அதன் துவாஸ் ஆலையில் பொருத்தியுள்ளது. 

இதன் மூலம் அதிக அளவு ரசாயனங்களைக் கொண்டு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது.

இந்த அணுகுமுறையின் வாயிலாக ‘வயத் நியூட்ரிஷன்ஸ்’ பயன்படுத்தும் தண்ணீரின் அளவு 25 விழுக்காடு குறைந் துள்ளது.

பொதுப் பயனீட்டுக் கழகத் தின் உதவியோடு மேலும் 13 தண்ணீர் சேமிப்புத் திட்டங்கள் 2021ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

34 தண்ணீர் சேமிப்புத் திட்டங்கள் தொடங்கிவிட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் சிங்கப்பூர் அனைத்துலகத் தண்ணீர் வார ‘ஸ்பாட்லைட்’   நிகழ்ச்சியின்போது தொழிற்துறை தண்ணீர் நிர்வாகத்தில் முதல்முறையாகக் கவனம் செலுத்தப்படும். 

இம்மாதம் 6ஆம், 7ஆம் தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

உள்ளூர், அனைத்துலகத் தண்ணீர் நிறுவனங்களைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட தலைவர்கள் மரினா பே சேண்ட்ஸில் உள்ள சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

“இந்த நிகழ்ச்சியின் மூலம் தொழிற்துறை தண்ணீர் தீர்வு களுக்கான தொழில்நுட்பத்தின் ஆற்றலை நிறுவனங்களுக்குக் காட்டி அவற்றைப் பயன்படுத்த ஊக்கவிக்க விரும்புகிறோம்,” என்று கழகத்தின் தலைமை நிர்வாகி இங் ஜூ ஹீ கூறினார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon