நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள் நடத்திய திடீர் சோதனையில் 20 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹவ்காங், தெலுக் பிளாங்கா, தியோங் பாரு ஆகிய மூன்று இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விதிமுறைகளை மீறிய சாத னங்கள், தவறான பாதையில் அவற்றைச் செலுத்தியது ஆகி யவை பெரும்பாலான குற்றங்க ளில் அடங்கும்.
உந்து நடமாட்டச் சட்டத்தின் படி, தனிநபர் நடமாட்டச் சாதனங் கள் சாலைகளில் செல்ல அனுமதி கிடையாது. மேலும் அதன் எடை 20 கிலோ கிராமுக்கு மேல் போகாமல் இருக்க வேண்டும். அதன் வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டரைத் தாண்டக்
கூடாது. நடவடிக்கையில் பறி முதல் செய்யப்பட்ட சாதனங் களின் எடை 33 கிலோ, 28 கிலோ என்றும் கூறப்பட்டது.

