புதுப்பிக்கப்பட்ட டெக் கீ உணவங்காடி நிலையத்தில் முதியவருக்கு காயம்

புதுப்பிக்கப்பட்ட டெக் கீ உணவங்காடி நிலையத்தில் முதியவருக்கு காயம்

1 mins read

டெக் கீ ஸ்குவேர் உணவங்காடி நிலையத்தில் அமர்ந்து நேற்று முன்தினம் உணவருந்திக் கொண் டிருந்த 70 வயது முதியவர் ஒரு வரின் இருக்கை உடைந்ததால் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந் தார்.

அதனால் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங் களில் நேற்று முன்தினம் இரவு முதல் பகிரப்பட்டு வருகின்றன.

படத்தில் முதியவர் ஒருவர் கீழே அமர்ந்திருப்பதையும் அவருக் குப் பக்கத்தில் இளையர் ஒருவர் முதியவரின் தலையின் பின்புறத் தில் ஏதோ ஒரு பொருளை வைத்து ரத்தம் கசிவதைத் தடுக்க முயல்வதுபோலவும் தெரிந்தது.

அங் மோ கியோ அவென்யூ 10, புளோக் 409ல் உதவி தேவைப் படுவதாகத் தனக்கு இரவு 11 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அந்த முதியவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என் றும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இரண்டு மாதங்கள் புதுப்பிப் புப் பணிகளுக்குப் பிறகு அந்த உணவங்காடி நிலையம் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் மீண் டும் திறக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தாங்கள் விசாரித்து வருவதாக அங் மோ கியோ நகர மன்றம் நேற்று தெரி வித்தது.