வீடில்லாதோருக்கு படுக்க இடம் தரும் தேவாலயங்கள்

வீடில்லாமல் தெருவோரத்தில் படுத்துறங்குவோருக்கு இரவில் இரு கத்தோலிக்க தேவாலயங்கள் அடைக்கலம் தருகின்றன.

புக்கிட் பாத்தோக்கில் உள்ள ‘செயின்ட் மேரி ஆஃப் த ஏஞ் சல்ஸ்’ தேவாலயம் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தும் அங் மோ கியோவில் உள்ள ‘கிறைஸ்ட் த கிங்’ தேவாலயம் இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்தும் வீடில் லாதோருக்கு அடைக்கலம் அளித்து வருகின்றன.

இரவு 9 மணிக்கு மேல் இந் தத் தேவாலயங்களுக்குச் செல் லும் வீடில்லாதோருக்கு மெத்தை, தலையணை, காற்றாடி ஆகியவை கொடுக்கப்படும்.

அவர்கள் தேவாலயத்தின் வகுப்பறைகளில் படுத்துக்கொள் வார்கள். அவ்வாறு இரவில் தங் கும் அவர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்குள் தேவாலயத்தை விட்டு சென்றுவிட வேண்டும்.

“இரவில் உறங்க இடம் தேடு வோருக்குப் பல்வேறு பிரச்சி னைகள் உண்டு. சிலர் தங் களுக்கு வாடகை வீடு இருந்தும் அங்குள்ளவர்களுடன் ஒத்துப் போக முடியாத காரணத்தால் இங்கு வருகிறார்கள். சிலர் தங் கள் உறவினர்களை விட்டு பிரிந்து வாழ்வதால் இவ்வாறு அடைக்கலம் நாடுகிறார்கள்,” என்றார் கத்தோலிக்க நல்வாழ்வு சேவைகள் அமைப்பின் தலைமை நிர்வாகி திரு ஜேம்ஸ் சியூ.

இவர்களில் சிலர் நல்வாழ்வு இல்லங்களில் வசிக்க விரும்புவ தில்லை அல்லது சமுதாய, குடும்ப மேம்பாடு அமைச்சு வழங்கும் தற்காலிக இல்லங்களுக்கு தகுதி பெறுவதில்லை. சிலர் வீட மைப்பு வளர்ச்சிக் கழக வீடு களுக்குத் தகுதி பெறுவது இல்லை.

“தங்கள் வளாகத்தை வீடில் லாதோருக்கு திறந்துவிட சமு தாய, குடும்ப மேம்பாடு அமைச்சு சில சமயக் குழுக்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறது. மேலும் பொது இடங்களில் படுத் துறங்குவோரைக் கண்டறிந்து அவர்களை நாடி அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அதற் கேற்றாற்போல் அமைச்சு உதவி வழங்கி வருகிறது,” என்றார் அமைச்சின் பேச்சாளர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 290 தனிநபர்கள் அமைச்சு நிதி ஆதரவு அளிக்கும் இடங்களிலி ருந்து உதவி பெறுகிறார்கள். அவர்கள் வீடில்லாதவர்கள், ஆதரவற்றோர் அல்லது பொது இடங்களில் படுத்துறங்குவோர்.

வீடமைப்புத் தெரிவுகள் இல் லாத வீடில்லாதோரும் தனிநபர் களும் தற்காலிகமாக தங்குவ தற்கு சிங்கப்பூரில் மூன்று இல் லங்கள் உள்ளன என்றும் அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!