உணவு, பானத் துறையில் பிளாஸ் டிக் கழிவுப்பொருளைக் குறைக்கும் பெருமுயற்சியின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் உள்ள சுமார் 270 உணவுக் கடைகள் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ் டிக் உறிஞ்சு குழாய்கள் வழங்கு வதை நிறுத்திக்கொள்ளும்.
31 நிறுவனங்களைச் சேர்ந்த இந்த உணவுக்கடைகள் குறிப்பிடத்தக்க மருத்துவ காரணங்க ளுக்காக பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்களைக் கேட்கும் வாடிக்கை யாளர்களுக்கு மட்டும் அவற்றை வழங்கும் என்று 'வோர்ல்ட் வைட் ஃபண்ட் ஃபோர் ஃபியுச்சர்' (WWF) எனும் அமைப்பு நேற்று தெரிவித்தது.
எக்கோர் குழுமத்தின் கீழ்வரும் ராஃபிள்ஸ், 'ஃபேர்மோண்ட்', 'சுவி ஸே„ட்டல் த ஸ்டாம்பர்ட்' ஹோட் டல்களில் இயங்கும் அனைத்து 53 உணவகங்கள், மதுக்கூடங்கள், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், 'நைட் சஃபாரி', 'ரிவர் சஃபாரி', ஜூரோங் பறவைப் பூங்கா ஆகிய வற்றில் உள்ள 24 உணவு, பானக் கடைகள் ஆகியவையும் பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்களை வழங்காது.
பாஸ்டாமானியா உணவகத்தின் 24 கிளைகள், 'ஸ்பா எஸ்பிரிட்' குழுமத்தின் 15 உணவு, பானக் கடைகள், தியோங் பாரு பேக்கரி ஆகியவையும் இந்நடவடிக்கையில் சேர்ந்துகொள்ளும்.
தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் கழிவற்ற அமைப்பு ஆகியவற்றின் ஆதரவில் 'வோர்ல்ட் வைட் ஃபண்ட் ஃபோர் ஃபியூச்சர்' அமைப்பின் பிளாஸ்டிக் செயல்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

