சுடச் சுடச் செய்திகள்

எடைக் குறைப்பு மருந்துகளில் தடைசெய்யப்பட்ட பொருள் 

கடுமையான இருதயச் செயலிழப்புக்கு ஆளான ஒரு மாது உட்பட, ஐந்து பயனீட்டாளர்கள் விபரீத சுகாதாரக் கேடுகளால் பாதிக்கப் பட்டதாக புகார் செய்ததைத் தொடர்ந்து, நான்கு சுகாதாரத் தயாரிப்புகள் பற்றி சுகாதார அறிவியல் ஆணையம் எச் சரிக்கை வெளியிட்டுள்ளது. இவற்றுள் மூன்று எடை குறைப் புக்கு உரியவை.

இந்தத் தயாரிப்புகளைப் பரி சோதித்த ஆணையம், அடை யாளம் காணப்படாத ஆபத்தான மருந்துப் பொருட்கள் அவற்றில் இருந்ததைக் கண்டறிந்தது. “பிபி பாடி”, “பெல்லோ ஸ்மேஸ்”, “சொக்கோ ஃபிட்” ஆகியவற்றில் ‘சிபுட்ரமின்’ இருந்தது. எடைக் குறைப்பு தொடர்பில் தடை செய் யப்பட்ட பொருள் சிபுட்ரமின்.

மலேசியாவைச் சேர்ந்த ஓர் இணைய விற்பனையாளரிட மிருந்து “பிபி பாடி” தயாரிப்பை வாங்கிய 50 வயதுகளிலுள்ள ஒரு மாது, அந்தத் தயாரிப்பைச் சுமார் மூன்று மாதங்கள் உட் கொண்டபிறகு அவரது இதயம் வெகுவேகமாகத் துடிக்கத் தொடங்கியது. இதனால் அவர் சுயநினைவை இழந்தார். தற் போது இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மாது, இன்ஸ்டகிராம் மூலம் “பிபி பாடி” பற்றி தெரிந்து கொண்டதாக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை வழி தெரிவித்தது.

இருபது வயதுகளில் உள்ள மற்றொரு பெண் “பெல்லோ ஸ்மேஸ்” உட்கொண்ட பிறகு அவருக்கு இதயப் படபடப்பும் தூக்கமின்மையும் ஏற்பட்டன. நான்கு நாட்களில் அவருக்குத் தற்கொலை எண்ணங்களும் எழுந்தன. இப்பொருளை எடை குறைப்பதற்காக உள்ளூர் விற் பனையாளரிடமிருந்து அவர் வாங்கியிருந்தார். 

இந்தத் தயாரிப்புகளின் விளம்பரங்களை அகற்றும்படி அவற்றை விற்பனை செய்யும் உள்ளூர் இணையத்தளங்களின் நிர்வாகிகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதோடு அறிமுகமில்லாத வெளிநாட்டுத் தரப்புகளிடமிருந்தும் இணையத் திலிருந்தும் இதுபோன்ற சுகா தாரத் தயாரிப்புகளை வாங்கு வதைத் தவிர்க்கும்படி ஆணை யம் ஆலோசனை கூறியது.

பரிசோதிக்கப்பட்ட எடைக் குறைப்பு தயாரிப்புகளில் அடையாளம் காணப்படாத மருந்துப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon