காரின் கட்டுப்பாட்டை அதன் 26 வயது பெண் ஓட்டுநர் இழந்ததில், கார் ஓர் இந்திய முஸ்லிம் உணவகத்தை மோதியது.
நேற்று முன்தினம் பகல் நடந்த இச்சம்பவத்தில் கேலாங் சாலை வழி வாகனத்தை ஓட்டிச் சென்ற பெண், காரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை மீது வாக னத்தை ஏற்றியது மட்டுமல்லாமல் அங்கிருந்த ஓர் உணவகத்தையும் சேதப்படுத்தினார்.
காலாங் சாலையை நோக்கிச் செல்லும் கேலாங் சாலையில் விபத்து நிகழ்ந்திருப்பதாக இரண்டு மணியளவில் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித் தனர்.
கேலாங் சாலைக்கும் கேலாங் லோரோங் 10க்கும் இடையில் உள்ள சாலைச் சந்திப்பில் அமைந் துள்ள 'ஏபிசி பிஸ்ட்ரோ' உண வகத்தில் இருந்த கிட்டத்தட்ட 20 வாடிக்கையாளர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கார் ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனைக்குச் சுயநினை வுடன் கொண்டு செல்லப்பட்டதாக வும் தெரிவிக்கப்பட்டது.
அவர் மீது காயம் ஏதும் தென் படாவிட்டாலும் அவருக்கு மயக் கமாக இருப்பதாக அவர் கூறினார் என்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழுக்குக் கூறப்பட்டது.
23 மணிநேரம் இயங்கி வரும் உணவகத்திற்கு வெளியே இருந்த பல மேசைகளையும் நாற்காலிகளை யும் இடித்துத் தள்ளிவிட்டு கார் நின்றதாக சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் சொன்னார்.
கார் இன்னும் சிறிது தூரம் சென்றிருந்தால் ஒரு சுவரில் மோதி இருக்கும் என்றும் கூறப்பட்டது.
கார் மோதியதை அடுத்து உண வகத்தில் இருந்த பலர் உணவைச் சாப்பிட்டு முடிக்காமலேயே அங் கிருந்து சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.

