$5 "மாவ் ‌‌‌ஷான் வாங்" டுரியான்

$5 "மாவ் ‌‌‌ஷான் வாங்" டுரியான்

1 mins read
9a549d22-ea9d-4b4a-8aeb-2d8ace26e6bc
-

ஹவ்காங் வட்டாரத்தில் அமைந்துள்ள 'ஹாவ் சி லியூ லியன்' (Hao Chi Liu Lian) டுரியான் கடையில் 'மாவ் ‌‌‌ஷான் வாங்' டுரியானின் விலை குறைந்து $5க்கு விற்பனையாகிறது.

பாகாங், ஜோகூர் பாரு பகுதிகளின் அமோகமான டுரியான் விளைச்சல் இதற்குக் காரணம்.

அடுத்த கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு அதிகமான டுரியான்கள் இருக்கும் என்று கடையின் உரிமையாளர் 26 வயது வொங் ‌‌‌ஷா ஹுய் (Wong Sha Hui) நம்பிக்கை தெரிவித்தார்.

சொங் பாங் வட்டாரத்தில் அமைந்துள்ள இந்தக் கடையின் மற்றொரு கிளையிலும் $5க்கு டுரியான்கள் விற்பனையாகின்றன.

தற்போது விற்கப்படும் 'மாவ் ‌‌‌ஷான் வாங்' டுரியான்களின் வழக்கமான விலை $15 முதல் $22 வரை.

டுரியான்களின் விளைச்சல் பெருகும்போது, விலை குறைந்துகொண்டே இருக்கும் என்று டுரியான் விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.